கந்தசஷ்டி கவச விவகாரத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவேண்டும் - பாஜக தலைவர் எல்.முருகன்

ரஜினிகாந்த் கந்தசஷ்டி கவசம் விவகாரத்தில் குரல் கொடுக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கந்தசஷ்டி கவச விவகாரத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவேண்டும் - பாஜக தலைவர் எல்.முருகன்
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்
  • News18
  • Last Updated: July 21, 2020, 4:41 PM IST
  • Share this:
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் இன்று இந்துக்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர். அதைத்தொடர்ந்து கோவையில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்துக்கள் மனம் தற்போது புண்பட்டுள்ளது. நாங்கள் ஆரம்பத்திலிருந்து வைக்கக்கூடிய கோரிக்கை கருப்பர் கூட்டம் போன்ற நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அதை தவிர்த்து யூடியூப் சேனலை முடக்க வேண்டும் இதற்குப் பின்புலமாக இருக்கக்கூடிய விசாரிக்க வேண்டும்.

எனவே இந்துக்கள் மனம் புண்படும்படி நடந்துக் கொண்ட அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இந்த சூழலை சரி செய்ய வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக்கொள்வதாக கூறினார்.


Also read... கொரோனா தடுப்பு பணியில் தமிழகம் முன்மாதிரியாக விளங்குகிறது - அமைச்சர் காமராஜ்

தேர்தல் வெற்றி அதிமுகவிடம் இருந்து மாற்றுப் பாதைக்கு அதாவது ரஜினியிடம் சென்றுவிடும் என்ற கருத்தை அதிமுகவிற்கு எச்சரிக்கை விடுகிறதா என்ற கேள்விக்கு? நிச்சயமாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அது போன்ற சூழல் ஏற்படும் எனவும் எல்.முருகன் கூறினார்.


படிக்க: தமிழ்நாட்டில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி (Covaxin) பயன்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள்..

படிக்க: ”கொஞ்சம் அன்பு வேண்டும்” - சுஷாந்த் சிங் ஆன்மாவுடன் பேசியதாக வீடியோக்களை வெளியிட்ட அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் (வீடியோ)
அண்ணன் ரஜினிகாந்த் அவர்கள் மிகப்பெரிய ஆன்மீகவாதி தேசியவாதி எனவே அவர் கந்தசஷ்டி விவகாரத்தில் குரல் கொடுக்கவேண்டும். அவர் மட்டுமல்ல அத்தனை பேரும் குரல் கொடுக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

சட்டமன்ற தேர்தலுக்கான வியூகத்தை தொடங்கிவிட்டோம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுடன் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
First published: July 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading