ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்ணாமலையை சீண்டிய தயாநிதி மாறன்.. ட்விட்டரில் தந்த பதிலடி..

அண்ணாமலையை சீண்டிய தயாநிதி மாறன்.. ட்விட்டரில் தந்த பதிலடி..

MP Dayanithimaran - Annamalai BJP

MP Dayanithimaran - Annamalai BJP

திமுக எம்.பி தயாநிதி மாறனின் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிலடி தந்திருக்கிறார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கர்நாடகாவிற்கு தூதுவராக அனுப்புவோம் என திமுக எம்.பி தயாநிதி மாறன் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக உங்கள் குடும்ப விமானத்தை அனுப்பிவைத்தால் விவசாயிகளை அழைத்துக்கொண்டு உடனடியாக தூது செல்ல தயாராக இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதில் கர்நாடக அரசு பிடிவாதமாக இருந்து வருகிறது. அங்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் முதல்வர் பசவராஜ் பொம்மையும் அணை கட்ட அனுமதி கோரி டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறார்.

Also Read:  குளிக்கச் சென்ற இடத்தில் பெற்றோரை பலிகொடுத்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் 13 வயது சிறுமி!

இதனிடையே மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் போக்கை கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரும் 5ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசிய திமுக எம்.பி தயாநிதிமாறன், “தமிழ்நாடு பாஜக போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறி வரும் நிலையில், சுமூக தீர்வு காண மாவீரன் அண்ணாமலையையே தூதுவராக அனுப்புவோம்” என அவர் தெரிவித்தார்.

Also Read:   அரசியலுக்கே முழுக்கு.. எம்.பி பதவியும் ராஜினாமா. அதிரவைத்த பாஜகவின் பாபுல் சுப்ரியோ..

எம்.பி தயாநிதி மாறனின் கருத்துக்கு ட்விட்டரில் பதிலடி தந்திருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் பதிவில், “கொரோனா நோய்த்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது டி20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டிருந்த தயாநிதி மாறன் அவர்கள் மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு நன்றி.

உங்களின் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு கர்நாடகாவிற்கு தூது செல்ல நான் தயார். இதை அவர் மாமா திரு.மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கும் அண்ணாமலை, கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், திமுக எம்.பி தயாநிதி மாறனுக்கும் இடையிலான இந்த மோதல் விவகாரம் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது.

First published:

Tags: Annamalai, BJP, Dhayanidhi Maran, DMK