தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. மாவோயிஸ்டுகளிடமிருந்து தீவிரவாதிகளிடமிருந்தும் அண்ணாமலைக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக இரண்டு நாட்களாக மத்திய உள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலை வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து சென்றதாக கூறப்படுகிறது.
பாதுகாப்பு அதிகரிப்புக்கான ஒப்புதல் கையெழுத்தும் அண்ணாமலையிடம் பெறப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து Y பிரிவு பாதுகாப்பில் இருந்த அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் 20-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர் எனவும் அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு தருவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அமைச்சர்களின் பதவிக்காக பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், தனிநபர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கும்.
(SPL CARD IN ) இந்தியாவில் X, Y,Y PLUS,Z. ZPLUS மற்றும் SPG என ஆறு வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன. SPG என்று அழைக்கப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு பிரதமருக்கு மட்டும் பாதுகாப்பு வழங்கும். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
2018- ல் மக்களவையில் அரசு வெளியிட்ட தகவலில் இந்தியாவில் 300 பேருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது. X பிரிவில் இரண்டு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிப்பார்கள். அதாவது ஆறு PSOக்கள் 8 மணி நேரம் பணியில் ஈடுப்படுவார்கள்.
Y பிரிவில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளும் ஆயுதம் ஏந்திய ஒருவரும் பாதுகாப்பு அளிப்பார்கள். அதாவது 11 பேர், ஷிப்ட் முறையில் பாதுகாப்பு அளிப்பார்கள். இரவு நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். Y PLUS பாதுகாப்பின் கீழ், ஐந்து பணியாளர்கள், ஒரு CRPF மற்றும் நான்கு கான்ஸ்டபிள்கள் இல்லத்தில் நிறுத்தப்படுவர். ஆறு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மூன்று ஷிப்டுகளில் சுழற்சி அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
Z பிரிவை பொறுத்தவரை 22 அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். அதில் 2 முதல் 8 ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் வசிப்பிடத்தில் அமர்த்தப்படுவர். இது தவிர 1 முதுல் 3 ஆயுதம் ஏந்திய காவலர்கள் விஐபியின் பயணத்தின் போது உடன் செல்வர். Z PLUS பிரிவுக்கு உட்பட்டவர்கள் 22 பாதுகாப்பு அதிகாரிகளின் வளையத்தில் இருப்பார்கள். அது தவிர குண்டு துளைக்காத கார், 3 ஷிப்ட்களில் பாதுகாப்பு ஆகியவவை அளிக்கப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.