ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்ணாமலைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு... 24 மணி நேரமும் இசட் பிரிவு கமாண்டோ பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு நடவடிக்கை

அண்ணாமலைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு... 24 மணி நேரமும் இசட் பிரிவு கமாண்டோ பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு நடவடிக்கை

அண்ணாமலை

அண்ணாமலை

தற்போது Y பிரிவு பாதுகாப்பு அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது Y பிரிவு பாதுகாப்பில் உள்ள அண்ணாமலைக்கு Z பிரிவாக உயர்த்தப்படுகிறது.

இதனால் 20-க்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அளிக்கவுள்ளனர் எனவும் அண்ணாமலை வீடு, அவர் தங்கும், செல்லும் இடங்களில் 24 மணி நேரமும் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு தருவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

மாவோஸ்டுகளிடமிருந்தும் மத தீவிரவாதிகளிடமிருந்தும் இவருக்கு மிரட்டல் வந்ததால் இந்த பாதுகாப்பு வழங்கி இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களாக மத்திய உள்துறையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் அண்ணாமலை வீடு உள்ளிட்ட இடங்களில் வந்து சோதனை செய்து சென்றுள்ளனர். இதற்கான ஒப்புதல் கையெழுத்தும் அண்ணாமலையிடம் பெறப்பட்டுள்ளது.

First published:

Tags: Annamalai, BJP, Home Minister Amit shah