முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மேலும் ஒரு பாஜக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்!

மேலும் ஒரு பாஜக நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்!

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி

அதிமுகவில் இணைந்த பாஜக நிர்வாகி

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kovilpatti, India

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து பாஜக போராட்டம் நடத்திய நிலையில், அப்பகுதி பாஜக நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்தார்.

தமிழ்நாடு பாஜகவில் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல் குமாரைத் தொடர்ந்து திலீப் கண்ணன், அம்மு, கிருஷ்ணன், விஜய் உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, மதுரையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில் பாஜகவினரை இணைத்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிக்கப்பட்ட நிலையில், கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. பாஜகவை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் அதே கோவில்பட்டியை சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் அதிமுகவில் இணைந்தனர். பாஜகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருந்த கோமதி அக்கட்சியில் இருந்து விலகி, முன்னாள் அமைச்சரும், அதிமுக எம்.எல்.ஏவுமான கடம்பூர் ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் ஐக்கியமாகி வருவதால் இருகட்சியினர் இடையே மோதல் முற்றியுள்ளது.

First published:

Tags: ADMK, BJP cadre