• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதம் இன்றும் தொடரும்...

சட்டப்பேரவையில், ஆளுநர் உரை மீதான விவாதம் இன்றும் தொடரும்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இன்றும் விவாதம் தொடரும் நிலையில், விவாதம் முடிந்ததும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலுரை நிகழ்த்த உள்ளார்.

  • Share this:
    சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் பிப்ரவரி 2ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. 3ம் தேதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

    தொடர்ந்து மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

    4 ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு, அதன் மீது விவாதம் தொடங்கியது. இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்.

    நேற்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டங்களுக்குத் தடை விதிக்கும் சட்ட மசோதா உள்ளிட்டவை தாக்கல் செய்யப்பட்டன.

    இன்றும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. விவாதம் முடிந்ததும் முதலமைச்சர் பழனிசாமி அதற்கான பதிலுரை நிகழ்த்துவார். இன்றே சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

    மேலும் படிக்க... பாஜக, பாமக இடப்பெறும் கூட்டணியில் விசிக இடம் பெறாது...



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: