சிப்காட் கேட்ட எம்.எல்.ஏ.. கலகல பதில் சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு
சிப்காட் கேட்ட எம்.எல்.ஏ.. கலகல பதில் சொன்ன அமைச்சர் தங்கம் தென்னரசு
தமிழக சட்டப்பேரவையில் பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
Minister Thangam Tennarasu | துப்பறியும் வேலையை சட்டமன்ற உறுப்பினர் செய்து கொடுத்தால் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க அரசு பரிசீலிக்கும்- அமைச்சர் தங்கம் தென்னரசு
செங்கம் தொகுதியில் உள்ள மேல் செங்கத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க அரசு முன் வருமா என செங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ கிரி எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய பதிலால் சட்டப்பேரவை சிரிப்பலையில் மூழ்கியது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6-ம் தேதி தொடங்கி, துறை வாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 14-ம் தேதி முதல் நேற்று வரை 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சட்டசபை கூட்டத் தொடர் இன்று மீண்டும் தொடங்கியது.
சட்டப்பேரவையில் இன்றைய தினம் வருவாய் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது வினாக்கள் விடை நேரத்தின் போது செங்கம் தொகுதியின் எம்.எல்.ஏ கிரி செங்கம் தொகுதியில் உள்ள மேல் செங்கத்தில் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மேல் செங்கத்தில் தனியாக சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் திட்டம் இல்லை என்றார்.
மேல் செங்கத்தில் 12 ஆயிரம் ஏக்கர் நிலம் இருப்பதால் இதனை பேசி தீர்வு கண்டு சிப்காட் பூங்கா அமைக்க முன்வரவேண்டும் என செங்கம் எம்.எல்.ஏபேசினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பூங்கா அமைக்க நிலம் தேவை நிலம் இருந்தால் சிப்காட் பூங்கா அமைக்க அரசு பரிசீலிக்கும், எனக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு நிலத்தை கண்டுபிடிக்க செல்வது இயலாது, துப்பறியும் வேலையை சட்டமன்ற உறுப்பினர் செய்து கொடுத்தால் சிப்காட் தொழிற் பூங்கா அமைக்க அரசு பரிசீலிக்கும் என்றார்.
Published by:Lilly Mary Kamala
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.