Home /News /tamil-nadu /

அரசுக்கு எதிராக உள்ள 4 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு

அரசுக்கு எதிராக உள்ள 4 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்க சபாநாயகர் முடிவு

தமிழக சட்டசபை

தமிழக சட்டசபை

எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • News18
  • Last Updated :
    டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுக்கு ஆதரவாக உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுக்கு எதிராக உள்ள தமிமுன் அன்சாரி ஆகிய 4 பேரிடம் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்க உள்ளார்.

    அதிமுக எம்.எல்.ஏ.க்களான கலைச்செல்வன், ரத்தினசபாபதி மற்றும் பிரபு ஆகிய மூவரும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களாக உள்ளனர்.

    அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் தற்போது, அதிமுகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர்.

    கருணாஸ் அவ்வப்போது அரசுக்கு ஆதரவாகவும் இருப்பதால், தமிமுன் அன்சாரி மீது மட்டும் நடவடிக்கை எடுக்க அரசு கொறடா சார்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

    இதற்காக, அரசு கொறடா ராஜேந்திரன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் ஆகியோர் உடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    கலைச்செல்வன், பிரபு, ரத்தினசபாபதி மற்றும் தமிமுன் அன்சாரி ஆகிய 4 பேரிடமும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்க உள்ளார்.

    4 பேர் அளிக்கும் விளக்கத்தை அடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநரிடம் புகார் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் காலியாக இருந்த 23 சட்டமன்ற தொகுதிகளில் 19 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

    இதன் முடிவுகள் மே 23-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

    Published by:Sankar
    First published:

    Tags: ADMK, Lok Sabha Election 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, TTV Dhinakaran

    அடுத்த செய்தி