ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களிடம் சபாநாயகர் நாளை விசாரணை

அரசுக்கு எதிராக வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்களிடம் சட்டப்பேரவை சபாநாயகர் நாளை காணொலி காட்சி மூலமாக விசாரணை மேற்கொள்கிறார்.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களிடம் சபாநாயகர் நாளை விசாரணை
ஓ பன்னீர் செல்வம் | முக ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: August 26, 2020, 2:06 PM IST
  • Share this:
கடந்த 2017 ம் ஆண்டு ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என இரண்டு அணியாக செயல்பட்டபோது, அரசு மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது  ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஆனால் ஆகஸ்ட் மாதம் இரு அணியும் ஒன்றாக இணைந்த பின்பு எவ்வித நடவடிக்கையும் சபாநாயகர் எடுக்கவில்லை. எனவே 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவேண்டுமென்று திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், ரங்கசாமி ஆகியோரும் வழங்கு தொடுத்தனர். இந்த வழக்கில் 11 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் கோரும் மனு மீது சபாநாயகர் எவ்வித உத்தரவும் பிறபிக்கவில்லை.


Also read... தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

எனவே சபாநாயகர் அதிகாரத்தில் தலையிடவோ, முடிவெடுக்க அறிவுறுத்தவோ முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.  மேலும் 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.



இதை எதிர்த்து திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சபாநாயகர் முடிவெடுக்க காலக்கெடு விதிக்கமுடியாது எனவும் சபாநாயகரே உரிய முடிவெடுப்பார் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்த விவகாரம் தொடர்பாக 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டு கடிதம் எழுதியிருந்தார். மேலும் தற்போது கொரோனா பாதிப்பு இருப்பதால் சட்டப்பேரவை சபாநாயகர் நாளை 11 உறுப்பினர்களுடன் காணொலி காட்சிமூலமாக விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.

அப்போது அரசுக்கு எதிராக வாக்களித்தது குறித்து விளக்கம் கேட்பார். இதன் பின்பு 11 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
First published: August 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading