Home /News /tamil-nadu /

கனத்த இதயத்துடன் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டேன் - சபாநாயகர் அப்பாவு

கனத்த இதயத்துடன் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டேன் - சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

Tamilnadu Assembly | கனத்த இதயத்துடன் தான் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டதாக சபாநாயகர் அப்பாவு பேரவையில் விளக்கம் அளித்தார்.

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்களை அவைகாவலர்கள் மூலமாக வெளியேற்றியது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய சபாநாயகர், காங்கிரஸ் உறுப்பினர் செல்வபெருந்தகை, தவறாக எதையும் பேசவில்லை என்றும் மகாமகம் விபத்து குறித்து அம்மையார் பேசி அவை குறிப்பில் உள்ளதை தான் பேசி இருப்பதாக தெரிவித்தார். மேலும், செல்வபெருந்தகை தனது தனிப்பட கருத்துகளை தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அவை விதிகளின்படி வெளிநடப்பு செய்த பின்பு மீண்டும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேசமுடியாது இருந்தும் தான் அனுமதி கொடுப்பதாக தெரிவித்தும் அதிமுக உறுப்பினர் முழக்கம் இட்டதாக சபாநாயகர் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சபை நாகரீகமாக நடப்பதாகவும், எதிர்கட்சிகளுக்கு தாராளமாக அனுமதி கொடுத்து பேச அனுமதிப்பதாக கூறினார். இந்த அரசு பதவியேற்று ஓராண்டு ஆகிவிட்டது. தமிழகத்தில் எந்த பகுதியிலும் மதத்தை வைத்து அரசியல் செய்யவில்லை என்றும், பாஜக உறுப்பினர்கள் கூட தங்களது கருத்துகளை நியாயமான முறையில் பதிவு செய்துள்ளனர். மேலும், அமைதியாகவும், நல்லிணக்கமாகவும் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று ஆளுநரே சொல்லியிருக்கிறார் என்று அப்பாவு குறிப்பிட்டார்.

Also Read : மாணவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய ஆவடி போலீசார்.. பேருந்து படிக்கட்டில் பயணம் செய்ததால் நடவடிக்கை..

ஆளும் கட்சியினர் பேசும் போது கூட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு நெருடல் இல்லாமல் பேச வேண்டும் என்று தான் முதலமைச்சரே கூறியிருக்கிறார் என்றும், நாகரிகமாக அவை நடந்துகொண்டுள்ளது என்று கூறிய சபாநயாகர், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிகமாகவே நேரம் தரப்படுகிறது என்றார்.

சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, கோவிந்தசாமி ஆகியோர் அமைச்சரை ஒருமையில் பேசியது வருத்தமளிக்கிறது என்றதோடு, கனத்த இதயத்தோடு தான் அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்டேன் என்றார். முதலாவதாக நடைபெறும் நிகழ்வு இது என்பதால், மன்னித்து விடலாம் என எண்ணுகிறேன் என்றும் இன்று நடந்தது இன்றோடு போகட்டும் இனி வரும்காலங்களில் இது போன்ற வரம்பு மீறிய செயல்கள் நடக்ககூடாது என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.
Published by:Vijay R
First published:

Tags: ADMK, DMK, TN Assembly

அடுத்த செய்தி