• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ‘ஜெய்ஹிந்த்’ விவகாரம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க முடியாது: சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!

‘ஜெய்ஹிந்த்’ விவகாரம் குறித்து பொதுவெளியில் விவாதிக்க முடியாது: சபாநாயகர் அப்பாவு திட்டவட்டம்!

பொதுவெளியில் விவாதிக்க முடியாது

பொதுவெளியில் விவாதிக்க முடியாது

அனைவருக்கும் விசைப்பலகை இணைப்புடனான கையடக்க கணினி கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர்,  நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

  • Share this:
ஜெய்ஹிந்த்  தொடர்பாக  உறுப்பினர் அவையில் பேசிய விவகாரத்தை பொதுவெளியில் விவாதிக்க இயலாது என  சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதிகள் குழுவின் முதல் கூட்டம் பேரவைத்தலைவர் அப்பாவு தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , தளவாய் சுந்தரம், வானதி சீனிவாசன், முனிரத்தினம் உள்ளிட்ட குழுவின் 15   உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சென்னையில் தொடங்கியது!


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு , “பேரவை விதிகள் குழு கூட்டத்தில் முதல்வர் சட்டப்பேரவை துணை தலைவர் ஆகியோர்  பங்கேற்றனர். காகிதம் இல்லாத இ- பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான சாத்திய கூறுகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அனைவருக்கும் விசைப்பலகை இணைப்புடனான கையடக்க கணினி கொடுக்கலாமா என்று ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்த அவர்,  நவீன தொழில் நுட்பத்துக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். பெரும்பான்மையான உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு கருத்துக்களை தெரிவித்துள்ளதாக அப்பாவு தெரிவித்தார். படிப்படியாக தான் இந்த இ - பட்ஜெட்  நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடைசி உறுப்பினர் கற்று கொள்ளும் வரையிலும் இரண்டு நடைமுறைகளும் தொடரும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் பாதிப்பு ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு - மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு...


மேலும், ஜெய்ஹிந்து விவகாரம் குறித்த கேள்விக்கு, அது தொடர்பாக பொதுவெளியில் விவாதிக்க முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: