Home /News /tamil-nadu /

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது: முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில்,திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு, ஒமைக்ரான் வைரஸ் பரவலுக்கும் இடையே, 16வது சட்டப் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் நாளை காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் உரையுடன் துவங்குகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் துவங்கும் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில், ஆளுநர் உரையில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டின் முதல் வாரத்திலும், அந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும். ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தில் அந்த ஆண்டிற்கான அரசின் திட்டங்கள் இடம்பெறும். 16ஆவது சட்டசபையின் இரண்டாம் கூட்டத்தொடராகவும், 2022 ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடராகவும் நாளை தொடங்கும் கூட்டத் தொடர் அமைந்துள்ளது.

    திமுக தலைமையிலான அரசு அமைந்துள்ள நிலையில், ஆளுநர் உரையில் திமுகவின் தேர்தல் அறிக்கையின் அம்சங்கள் அதிகளவில் இடம்பெறவுள்ளது. கடந்த கூட்டத்தொடரிலேயே திமுக தேர்தல் அறிக்கையில் பலவற்றை அறிவித்துள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற மற்ற வாக்குறுதிகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

    குறிப்பாக அனைத்து நீர்நிலைகளையும் பாதுகாக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்,  தை 1 தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு உள்ளிட்டவையும் இடம்பெறும் என்று எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழைவெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

    இதையும் படிங்க: கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் ஆதிக்கம்: அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு


    அதே நேரம் எதிர்க்கட்சிகள் தரப்பில் சட்டம் & ஒழுங்கு பிரச்சினை, முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு, திமுகவின் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள், குடும்பத் தலைவிகள் (பெண்கள் ) உரிமைத்தொகை, பொங்கல் பரிசுத்தொகை உள்ளிட்ட விவகாரங்கள் எழுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் ஆளுநர் உரை என்பதால் சுமார் இரண்டரை மணி நேரம் ஆளுநர் உரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆளுநர் உரைக்குப் பின்னர், பிற்பகலில் அலுவல் ஆய்வுக்கூட்டம் கூடி சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கவுள்ளது. இதில் வருகின்ற எட்டாம் தேதி வரை கூட்டத்தொடரை நடப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

    மேலும் படிக்க: போக்குவரத்து துறை ரூ.48,154 கோடி நஷ்டத்தில் செயல்படுகிறது -அமைச்சர் ராஜகண்ணப்பன்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Tamil Nadu Governor, TN Assembly

    அடுத்த செய்தி