Home /News /tamil-nadu /

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 2 நாட்கள் மட்டுமே நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, நாளை மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் பதிலுரை வழங்குவார். அதனுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவுபெறும். 2 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
    தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 2 நாட்களுக்கு நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். சட்டப்பேர்வை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

    இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. அதன்படி, ஆளுநர் வி.என்.ரவி உரையை வாசித்தார். நீட் நுழைவுத் தேர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கை உட்பட பல்வேறு அம்சங்கள் இந்த உரையில் இடம் பெற்றிருந்தன. ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

    ஆளுநர் உரையை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்  நாளை ஆரம்பிக்கப்பட்டு விவாதம் நாளை மற்றும் நாளை மறுநாள்நடைபெறுவது என அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நாளை மறுநாள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு முதல்வர் பதிலுரை வழங்குவார். அதனுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவுபெறும். இன்னும் 2 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும்.  சட்டப்பேரவை வினாக்கள் விடைகள் நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் பதிலுரையும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: நீட்டை ரத்து செய்வது குறித்த விளக்கம் இல்லை- ஆளுநர் உரை குறித்து ராமதாஸ் அதிருப்தி

    Published by:Murugesh M
    First published:

    Tags: MK Stalin, TN Assembly

    அடுத்த செய்தி