ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மு.க.ஸ்டாலின் அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்: முக்கிய விவகாரங்களில் கேள்வி எழுப்ப காத்திருக்கும் எதிர்கட்சிகள்

மு.க.ஸ்டாலின் அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்: முக்கிய விவகாரங்களில் கேள்வி எழுப்ப காத்திருக்கும் எதிர்கட்சிகள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் முக்கிய விவகாரங்களில் பிரச்னைகளை எழுப்ப எதிர்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது.

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கும். ஆளுநர் உரையில் இடம்பெறப்போகும் முக்கிய அம்சங்கள் என்னென்ன? புதிய அரசு அறிவிக்கப் போகும் திட்டங்கள் என்னென்ன என்பது குறித்த ஆவல் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் கூட்டத் தொடர் என்பதால் அதனை சிறப்பாக நடத்தவேண்டிய பொறுப்பு அக்கட்சிக்கு உள்ளது. சுமார் 10 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தற்போது எதிர்கட்சியாக சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர். முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சித் தலைவராக அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் பொறுப்பில் இருக்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க சார்பில் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்குள் நுழைகின்றனர். அதில், நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க சார்பில் இருமுறை அமைச்சராக இருந்தவர். எனவே, அவர் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார்.

எனவே, அ.தி.மு.க, பா.ஜ.க ஆகிய கட்சிகள் முக்கிய விவகாரங்களில் தி.மு.க அரசுக்கு கேள்விகளை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர். கொரோனா இரண்டாவது அலையை சிறப்பாக கையாண்டோம் என்று ஆளும் தி.மு.க அரசு சொல்லிவருகிறது. ஆனால், கொரோனாவை சரியாக கையாளவில்லை என்று அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் குற்றம்சாட்டிவருகிறது. எனவே, அதுகுறித்த பிரச்னைகளை இருகட்சிகளும் எழுப்பும் வாய்ப்பு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஊரடங்கு காலத்தில் காய்கறிகள் விலை உயர்ந்தது, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு குறித்தும் இரு கட்சிகளும் கேள்வி எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அ.தி.மு.க சார்பில் நீட் தேர்வு, ஏழு பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களை கேள்வி எழுப்பும். எனவே, மு.க.ஸ்டாலினுக்கு அவையை சிறப்பாக நடத்துவது சிரமமான ஒன்றாகத்தான் இருக்கும்.

First published:

Tags: ADMK, DMK, Edappadi Palaniswami, MKStalin