Home /News /tamil-nadu /

கொரோனா: சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த இடம் தேடும் தமிழக அரசு

கொரோனா: சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த இடம் தேடும் தமிழக அரசு

கொரோனா எதிரொலியாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரை, தனிமனித இடைவெளியுடன் எங்கு வைத்து நடத்தலாம் என அரசு தீவிரமாக பரிசீலித்துவருகிறது. இது தொடர்பாக கலைவாணர் அரங்கில் சபாநாயகர் தனபால் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மார்ச் 31-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் முன்கூட்டியே முடித்துவைக்கப்பட்டது. பேரவை விதிகளின்படி, குளிர்கால கூட்டத் தொடர் அடுத்த மாதம் 24-ஆம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும். இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, ஆளுநர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தொற்று ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, புனித ஜார்ஜ் கோட்டையில் தனிமனித இடைவெளியுடன் சட்டப்பேரவை கூட்டத் தொடரை நடத்துவது சாத்தியமில்லை என்பதால், மாற்று இடம் தேடப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் புனித ஜார்ஜ் கோட்டையை தவிர்த்து மாற்று இடங்களில் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படுவது புதிதல்ல. இதற்கு முன் 6 முறை மாற்று இடங்களில் பேரவை கூட்டம் நடந்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தின் செனட் ஹவுஸில் இரு வேறு காலகட்டங்களிலும், இன்றைய ராஜாஜி ஹால்என்றழைக்கப்படும் விருந்து மண்டபத்தில் 2 ஆண்டுகளும் நடைபெற்றது. 1959-ல் கோடை காலத்தையொட்டி ஊட்டி அரண்மைனையில் ஒரு முறையும், சென்னை அண்ணா சாலையில் கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தில் ஒரு முறையும் நடைபெற்றது. 1952-ல் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தின் கட்டப்பட்ட புதிய கட்டடத்திலும் பேரவை கூட்டத் தொடர்கள் நடந்திருக்கின்றன. அதுவே பின்னாளில் கலைவாணர் அரங்கம் ஆனது.

இந்நிலையில், கொரோனாவால் மீண்டும் கலைவாணர் அரங்கில் தற்காலிக சட்டமன்றத்தை கூட்டலாமா என பேச்சு எழுந்துள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள அந்த அரங்கில் சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் தனபால், , சட்டப்பேரவையை எங்கே நடத்துவது என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை என கூறினார்.

கலைவாணர் அரங்கின் 3-ஆவது தளத்தில் ஆயிரம் பேர் அமரும் வகையில் இட வசதி உள்ளதால், தனிமனித இடைவெளியுடன் அங்கு சட்டப்பேரவை கூட்டத்தை நடத்தலாமா என ஆய்வு செய்யப்பட்டதாக தெரிகிறது.
Published by:Yuvaraj V
First published:

Tags: TN Assembly

அடுத்த செய்தி