தமிழக சட்டப்பேரவை ஜுன் 28-ல் தொடங்கி ஜுலை 30 வரை நடைபெறும் - அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

கூட்டம் தொடரின் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டு மறுநாள் முதல் அவை அலுவல்கள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: June 24, 2019, 1:05 PM IST
தமிழக சட்டப்பேரவை ஜுன் 28-ல் தொடங்கி ஜுலை 30 வரை நடைபெறும் - அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு
தமிழக சட்டசபை
news18
Updated: June 24, 2019, 1:05 PM IST
தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி தொடங்கி அடுத்தமாதம் 30-ம் தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை வரும் 28-ம் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், எத்தனை நாட்கள் அவையை நடத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் ஜுலை 30 வரை அவை நடக்கும் என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டம் தொடரின் முதல் நாளில் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்பட்டு மறுநாள் முதல் அவை அலுவல்கள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...