தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளது. புதிய அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாசித்த அறிக்கையில், ‘ஈழத் தமிழர்களுக்கு குடிமை சார் மற்றும் அரசியல் உரிமைகளை உறுதி செய்திட இலங்கை அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களையும் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இந்த அரசு, மத்திய அரசை வற்புறுத்தும்.
பெரியார் காண விரும்பிய சுயமரியாதை சமூகமாகவும், உரிமை பெற்ற மக்களாகவும் எல்லா வளமும் கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உறுதி ஏற்று உள்ளது. தமிழ்நாட்டின் நிதி நிலையில் தற்போதைய நிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதி நிலையில் விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும். திருநங்கைகளின் வாழ்க்கையும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.
திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை நவீன தொழில் நுட்பங்களையும் கருவிகளையும் பயன்படுத்தி தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான சுகாதாரமான பணிச்சூழல் உருவாக்கித் தரப்படும். விவசாயிகள் நலனை பாதுகாக்க வேளாண் உற்பத்தியை பெருக்க வேளான்துறைக்கு தனியாக ஆண்டுதோறும் தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
கருணாநிதியால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, மாநில முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும். மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பிரச்னைகளில் தமிழக உரிமைகளை பாதுகாத்திட அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்.
முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தவும், தேவையான அனுமதியை விரைந்து வழங்குமாறும் கேரள அரசையும், மத்திய அரசையும் தமிழக அரசு வலியுறுத்தும். கட்சத்தீவை மீட்பது, மீனவர் நலனை பாதுகாக்கும் வகையில் உயிரிழப்புகளை தடுப்பது, தீர்வு காண மத்திய அரசை வலியுறுத்துவோம்.
மீனவர்கள் நலனுக்காக உள்நாட்டு மீனவர்களின் அனைத்து நலனை பாதுகாக்க தேசிய ஆணையத்தை அமைக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை பாதுகாக்க நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்துவதற்கான புதிய சட்டம் இயற்றப்படும்.
சென்னை கன்னியாகுமரி தொழில் பெருவழிகளும், சென்னை பெங்களூரு தொழில் வேறு வழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த கூடிய தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்கும். 100 ஆண்டுகளை கடந்து நிற்கும் தமிழ்நாடு இட ஒதுக்கீட்டுக் கொள்கை, சமூக நீதியை உறுதி செய்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அனைவரும் அறிந்த வகையில் தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும். பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரிசெய்ய தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும்’ என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, DMK, Governor Banwarilal purohit