ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆளுநரை திரும்பப் பெற தீர்மானம் கொண்டு வரப்படுமா...? சபாநாயகர் சொன்ன பதில்..!

ஆளுநரை திரும்பப் பெற தீர்மானம் கொண்டு வரப்படுமா...? சபாநாயகர் சொன்ன பதில்..!

ஆளுநர் - சபாநாயகர்

ஆளுநர் - சபாநாயகர்

ஆளுநரை திரும்ப பெற தீர்மானம் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர்  அரசின் கொள்கைகளை விளக்கினார். எனினும் திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்துவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படும் முன்பே வெளியேறினார் ஆளுநர். இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில் ஆய்வுக் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை வேதனையோடு தெரிவித்து கொள்கிறேன். ஆளுநர் முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். பொது மேடையில் பேசுவதை போல் பேசுவது ஏற்புடையது அல்ல. 5ம் தேதியே ஆளுநரிடம் முறைப்படி, சந்தித்து அவரிடம் உரை வழங்கப்பட்டது. ஆளுநர் உரைக்காக அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ள தவிர்த்து வேறு எதையும் பிரசுரிக்க வேண்டாம் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். அதையும் ஏற்றுக்கொண்டார். இந்திய அரசியலமைப்பு சட்டமே ஆளுநருக்கு அதிகாரம் கொடுத்துள்ளது.  அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கி கொடுத்த அம்பேத்கர் பெயரையே விட்டுவிட்டார்” என்று குறிப்பிட்டார்.

தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே நன்றாக உள்ளது என ஆளுநர்  கூறுவது சரியல்ல என்று குறிப்பிட்ட சபாநாயகர், “எந்த நோக்கத்திற்காக ஆளுநர் இதுபோல நடந்து கொள்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் என்ன நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் என்று தெரியவில்லை.இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. ஜனநாயகத்துடன் மரபுப்படியும் நடக்கக்கூடிய அரசு” என்று கூறினார்.

ஆளுநரை திரும்ப பெற தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,  “எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் பெரும்பான்மை அடிப்படையில் நிறைவேற்றி கொடுப்பது தான் என் பணி” என்று பதிலளித்தார்.

First published:

Tags: CM MK Stalin, RN Ravi, TN Assembly