ஜனவரி 2-ம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

தமிழக சட்டசபை

2019-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், இதில் ஆளுநர் உரையாற்றுகிறார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2-ம் தேதி கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பேரவை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

  இதுகுறித்து பேரவை செயலாளர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசியல் சட்டப்பிரிவு 174-இன்படி தமிழக சட்டப்பேரவை ஜனவரி 2-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் கூடும். இதற்கான உத்தரவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார்.

  2019-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் கூட்டம் என்பதால், இதில் ஆளுநர் உரையாற்றுகிறார். இதை தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடைபெறும்.

  கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து வரும் 2-ம் தேதி ஆளுநர் உரைக்கு பின்னர் முடிவெடுக்கப்படும். இந்தக் கூட்டத்தொடரில்  உறுப்பினர்களின் விவாதங்களுக்குப் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பார் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  Also watch

  Published by:DS Gopinath
  First published: