நீட் மசோதாவை நிராகரித்தற்காக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது - ஓ.பன்னீர் செல்வம்

news18
Updated: July 8, 2019, 12:03 PM IST
நீட் மசோதாவை நிராகரித்தற்காக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது - ஓ.பன்னீர் செல்வம்
ஓ.பன்னீர் செல்வம்
news18
Updated: July 8, 2019, 12:03 PM IST
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரும் மசோதாவை மத்திய அரசு நிராகரித்தற்காக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாக மத்திய அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் மு.க ஸ்டாலின் இன்று பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

“தமிழகத்தின் மசோதாவை நிராகரித்த மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

இதனை அடுத்து, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், “சட்டமன்ற தீர்மானங்களை பரிசீலிப்பது குடியரசுத்தலைவரின் பணி. இதனால், மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் இயற்ற முடியாது” என்று பதிலளித்தார்.

”நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் உள்ள விசயம் இது. சட்ட வல்லுநர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கருத்தை கேட்டறிந்து மீண்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக முடிவு செய்யப்படும்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

முன்னதாக நீட் விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி பேசினார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “நீட் விவகாரத்தில் திராவிட கட்சிகள் சரியாக இருக்கிறோம். நீட் விவகாரத்தில் காங்கிரஸ் செய்வது மிகப்பரிய அரசியல் நாடகம்” என்றார்.

 
First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...