Home /News /tamil-nadu /

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்: அமைச்சர் முக்கிய அறிவிப்பு

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்: அமைச்சர் முக்கிய அறிவிப்பு

சி.வி.கணேசன்

சி.வி.கணேசன்

கடந்த 10 ஆண்டுகளில் 27 லட்சத்து 50 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்திருந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
    தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் விரைவில் நிர்ணயம் செய்யப்படுமென தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

    சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன், தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் என்பது மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றது. மாவட்ட ஆட்சியர்களே ஊதியம் நிர்ணயம் செய்கின்றனர். பல இடங்களில் பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இதை முறைப்படுத்த வேண்டுமென கூறினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தொழிற்சங்கங்கள், அரசு மற்றும் வேலை வழங்குபவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கடந்த ஏப்ரல் 2ம் தேதி கூடி ஆலோசித்ததில், ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அடுத்த கூட்டம் மே மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தின் வாயிலாக ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்பட்டு, தொழிலாளர் நலன் காக்கும் வகையில் அடிப்படை ஊதியமானது நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    தொழிலாளர்களுக்கான சட்ட விதிகள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தனி நபருக்கோ, தொழிற்சங்கங்களுக்கோ அதில் சந்தேகம் இருந்தால், கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும், கருத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு, சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்படுமென அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி


    முன்னதாக பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்விக்கு பதிலளித்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தமிழகத்தில் 15 அமைப்பு சாரா தொழிலாளர் வாரியம் செயல்படுவதாகவும், கட்டுமான பணியின் போது உயிரிழக்கும் தொழிலாளர்களுக்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    மேலும் படிக்க: விக்னேஷ் லாக் அப் மரணமா.. சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்: ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவிப்பு


    கடந்த 10 ஆண்டுகளில் 27 லட்சத்து 50 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்திருந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் 10 லட்சம் தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் வாரியத்தில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Tamilnadu government, TN Assembly

    அடுத்த செய்தி