Home /News /tamil-nadu /

‘கோளரங்கம் பற்றி கேளுங்க... கோளாறான கேள்வி எல்லாம் கேட்கிறீங்க’ - சபாநாயகர் அப்பாவு பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை

‘கோளரங்கம் பற்றி கேளுங்க... கோளாறான கேள்வி எல்லாம் கேட்கிறீங்க’ - சபாநாயகர் அப்பாவு பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை

சபாநாயகர் அப்பாவு

சபாநாயகர் அப்பாவு

TN Assembly : தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது கோளரங்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, சபாநாயகர் அப்பாவு கூறிய கருத்தால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது கந்தவர்ககோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் சின்னதுரை மற்றும் மதுரை சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தங்கள் தொகுதிகளுக்கு கோளரங்கம் வேண்டும் என கேள்விகள் எழுப்பினர்.

    இதற்கு உயர்கல்வில்துறை அமைச்சர் க.பொன்முடி பதில் அளித்துப் பேசினார். இந்நிலையில், சட்டபேரவை உறுப்பினர் கோவிந்தசாமி மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் கட்டிடம் வேண்டும் என கேட்டார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, ஏங்க கேள்வி கோளரங்கம், துணை கேள்வி கேட்டால் விவரமா கேட்க வேண்டாமா என கேட்டார்.

    அடுத்ததாக சட்டபேரவை உறுப்பினர் ரவி, அரக்கோணம் அரசு கல்லூரி வகுப்பறை பற்றாகுறை என கேள்வி எழுப்பினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு, கோவிந்தசாமிக்கு சொன்னது தான், கேள்வி கோளரங்கம்; கோளரங்கம் அமைப்பது பற்றி கேளுங்கள், கோளாறான கேள்விகள் எல்லாம் கேட்கிறீங்க, உக்காருங்க என தெரிவித்தார். இதனால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

    இந்நிலையில், கந்தர்வகோட்டையில் கோளரங்கம் அமைப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் மொத்தம் 4 கோளரங்கம் உள்ளன. அவை திருச்சி, கோயம்புத்தூர், வேலூர் மற்றும் சென்னையில் உள்ளன.

    உங்கள் தொகுதி பக்கத்திலேயே திருச்சியில் ஒன்று உள்ளது அதை திறந்து வைத்தவர் கலைஞர்தான். திருச்சியில் உள்ள மையத்தை விரிவுபடுத்தி, மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு மையம் உருவாக்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் வேண்டும். செலவு 15.20 கோடி, பணியாளர் மற்றும் பராமரிப்புச் செலவுக்கு தொடர் செலவாக 65 கோடி ஆகும்.

    Must Read :  நாடு முழுவதும் கொரோனா பரவல் ஒரேநாளில் 66% அதிகரிப்பு : கலெக்டர்களுக்கு மருத்துவ செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய கடிதம்

    என் மாவட்டம் விழுப்புரத்தில் கூட தொடங்க வேண்டும் என ஆசை தான். ஆனால் வரும் காலங்களில் தமிழ்நாட்டின் நிதி நிலைக்கு ஏற்ப முடிவுகள், முதலமைச்சர் ஆலோசனைப்படி எடுக்கப்படும் என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Ponmudi, TN Assembly

    அடுத்த செய்தி