Home /News /tamil-nadu /

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா காலமானார்

சேடப்பட்டி முத்தையா

சேடப்பட்டி முத்தையா

Sedapatti muthiah: சேடப்பட்டி முத்தையா 1999 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியும் வகித்தார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India
    தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவரும், திமுக தேர்தல் பணிக்குழு தலைவருமான சேடப்பட்டி முத்தையா (வயது 77) மதுரையில் உடல்நல குறைவால் காலமானார்.

    மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வயது முதிர்வின் காரணமாக 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சேடப்பட்டி முத்தையா சிகிச்சை பலனின்றி காலமானார். இவர், 1991 முதல் 1996 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவி வகித்தார்

    1977, 1980, 1984, 1991 ஆகிய 4 முறை சேடப்பட்டி தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதால் சேடப்பட்டியார் என அழைக்கப்பட்டார் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 2 முறை பதவி வகித்த சேடப்பட்டி முத்தையா 1999 ல் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவியும் வகித்தார்.

    இதையும் படிங்க: சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்களை தொடர்ந்து அடிக்க தூண்டிய எஸ்.ஐ - பெண் காவலர் சாட்சியம்


    2006 ல் அதிமுகவிலிருந்து விலகிய சேடப்பட்டி முத்தையா தொடர்ந்து திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். சேடப்பட்டி முத்தையாவுக்கு சகுந்தலா எனும் மனைவியும், 2 மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர், இளைய மகன் மணிமாறன் திமுகவின் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: DMK, Politics, TN Assembly

    அடுத்த செய்தி