TN Assembly Election Result 2021 | மதியம் 2 மணி நிலவரப்படி முன்னிலையில் யார்?

TN Assembly Election Result 2021 | மதியம் 2 மணி நிலவரப்படி முன்னிலையில் யார்?

மாதிரி படம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 145 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதிமுக கூட்டணி 88 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

    திமுக கூட்டணி 145 தொகுதிகளில் முன்னிலை 

    திமுக: 112
    காங்கிரஸ்: 26
    விசிக: 5
    மதிமுக: 4
    கம்யூ. : 2
    மார்க்சிஸ்ட்: 2
    மற்றவை: 3

    அதிமுக கூட்டணி 88 தொகுதிகளில் முன்னிலை 

    அதிமுக + : 88
    அதிமுக: 78
    பாமக : 5
    பாஜக: 4
    மற்றவை : 1

    மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

    இந்தமுறை கோயம்புத்தூர், கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் தி.மு.க ஆழமாக கால்பதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அ.தி.மு.க தனது ஆதிக்கத்தை நிரூபித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 தொகுதிகளில் தி.மு.க 3 தொகுதிகளிலும், அ.தி.மு.க 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. சேலத்தில் மொத்தமுள்ள 9 தொகுதிகளில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலையில் உள்ளது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுயில் அவர் 40,000 வாக்குகள் வரையில் முன்னிலையில் உள்ளார்.

    கோயம்புத்தூரில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி முன்னிலையில் உள்ளது. தி.மு.க ஒரு தொகுதியிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் அ.தி.மு.க கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க 3 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது.மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட தென் மாவட்டங்களில் தி.மு.க அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது.
    Published by:Vijay R
    First published: