Home /News /tamil-nadu /

TN Assembly Election Result 2021 | தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக தலைவர் எல்.முருகன் பின்னடைவு

TN Assembly Election Result 2021 | தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக தலைவர் எல்.முருகன் பின்னடைவு

எல்.முருகன்

எல்.முருகன்

தாராபுரம் தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த கயல்விழி 48,998 வாக்குகளையும், எல்.முருகன் 47, 832 வாக்குகளையும் பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறார்.

    தமிழகத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில், தபால் வாக்குகளைப் பொறுத்தவரை திமுகதான் அதிக இடங்களில் முன்னிலை வகித்தன. பின்னர் வாக்கு எந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்பட்டன. அதில் ஆரம்பம் முதலே திமுக கூட்டணி அதிக இடங்களை பிடிக்கத் தொடங்கியது. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது திமுக 117 தொகுதிளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

    இதனால் தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 1996-ம் வருடத்திற்கு பின்னர் தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    தாராபுரம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பின்னடைவை சந்தித்திருக்கிறார். தாராபுரம் தொகுதியில் தற்போது திமுகவை சேர்ந்த கயல்விழி 48,998 வாக்குகளையும், எல்.முருகன் 47, 832 வாக்குகளையும் பெற்றுள்ளார். இதன் மூலமாக எல். முருகன் 1,166 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.

    இதேபோல், காலை முதல் பின்னடைவை சந்தித்து வந்த திமுக வேட்பாளர் துரைமுருகன், தற்போது 16 ஆவது சுற்றில் 57 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார். அதனைத் தொடர்ந்து அவர் 63,500 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: AIADMK Alliance, BJP, DMK, Election Result, L Murugan, TN Assembly Election 2021

    அடுத்த செய்தி