இணைந்து பணியாற்றுவோம் - மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இணைந்து பணியாற்றுவோம் - மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மு.க.ஸ்டாலின், மோடி

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 • Share this:
  ஏப்ரல் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களம் கண்டது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் திமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறின. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. அதனால், மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதியாகியுள்ளது. இந்தநிலையில் மு.க.ஸ்டாலினுக்கு தேசிய அளவிலுள்ள தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.


  இந்தநிலையில், பிரதமர் மோடியும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். தேச வளர்ச்சி, பிராந்திய தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் கொரோனா தொற்றைத் தோற்கடித்தல் உள்ளிட்ட பணிகளில் ஒன்றாக இணைந்து பணியாற்றும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  அதற்கு பதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின், ‘உங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நன்றி. மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன். கூட்டாச்சி ஒத்துழைப்பின் மூலம் கொரோனா பாதிப்பை நாம் கடந்துவருவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: