TN Assembly Election Result 2021 | பாமக வெற்றி பெற்ற தொகுதிகள் எவை?

ராமதாஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 தொகுதிகளில் வென்றுள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணி நேற்று தொடங்கியது. தற்போது வரை வெற்றி மற்றும் முன்னிலையுடன் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.

    அதிமுக 65 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியான பாமக 5 இடங்களிலும், பாமக 5 இடங்களையும் கைப்பற்றி உள்ளது. இதில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க 5 தொகுதிகளில் வென்றுள்ளது. சேலம் மேற்குத் தொகுதியில் இரா. அருள், பென்னாகரம் தொகுதியில், பென்னாகரத்தில் பாமக தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதேபோல், தருமபுரி தொகுதியில், வெங்டேஸ்வரன், மயிலம் தொகுதியில் சிவகுமார், மேட்டூர் தொகுதியில் சதாசிவம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

    கடந்த தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத பா.ம.க. தற்போது அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் வென்றுள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தலைவர்களில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன்,  மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வியடைந்தனர். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். மேலும்  விருத்தாசலத்தில் டெபாசிட் இழந்தார் பிரேமலதா.
    Published by:Vijay R
    First published: