முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 25 ஆண்டுகளுக்கு பின் விளாத்திக்குளம் தொகுதியில் திமுக வெற்றி

25 ஆண்டுகளுக்கு பின் விளாத்திக்குளம் தொகுதியில் திமுக வெற்றி

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Last Updated :

தமிழக சட்டமன்ற தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் 25 ஆண்டுகளுக்கு பின் திமுக வெற்றியடைந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 147 தொகுதிளிலும், அதிமுக கூட்டணி 86 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதயில் திமுக-வின் வெற்றி உறுதியாகி உள்ளது. திமுக வேட்பாளர் மார்கண்டேயன் 89130 வாக்குகள் பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 51237 வாக்குகள் பெற்றுள்ளார்

இதனால் 37893 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2300 தபால் வாக்கு முடிவு மட்டும் வர வேண்டியுள்ளது. இதையடுத்து 25 ஆண்டுகள் கழித்து திமுக விளாத்திகுளம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: TN Assembly Election 2021, Vilathikulam Constituency