TN Assembly Election Result 2021 | தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் திமுக

TN Assembly Election Result 2021 | தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் திமுக

மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள் (Tamil Nadu Assembly Election Constituency):தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி முடிவுகள், தேர்தல் முடிவுகள், தேர்தல் செய்திகள்

  • Share this:
    தமிழகத்தில் 1996-க்கு பின் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக 117 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தலில் தற்போது வரை திமுக 150 தொகுதிகளிலும், அதிமுக 83 தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது திமுக 117 தொகுதிளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

    இதனால் தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 1996-ம் வருடத்திற்கு பின்னர் தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    திமுக கூட்டணி 150தொகுதிகளில் முன்னிலை 

    திமுக: 117
    காங்கிரஸ்: 26
    விசிக: 5
    மதிமுக: 4
    கம்யூ. : 2
    மார்க்சிஸ்ட்: 2
    மற்றவை: 3

    அதிமுக கூட்டணி 83 தொகுதிகளில் முன்னிலை 

    அதிமுக: 73
    பாமக : 5
    பாஜக: 4
    மற்றவை : 1

    மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.
    Published by:Vijay R
    First published: