• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவை தெற்கு தொகுதி: நீண்ட இழுபறிக்குப் பிறகு வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி: கமல்ஹாசன் தோல்வி

கோவை தெற்கு தொகுதி: நீண்ட இழுபறிக்குப் பிறகு வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி: கமல்ஹாசன் தோல்வி

வானதி சீனிவாசன் - கமல்ஹாசன்

வானதி சீனிவாசன் - கமல்ஹாசன்

கோவை தெற்கு தொகுதியில் நீண்ட நேர இழுபறிக்குப் பிறகு பா.ஜ.க வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். கமல்ஹாசன் தோல்வியைத் தழுவியுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. 200 தொகுதிகளுக்கு வெற்றி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி தி.மு.க 135 தொகுதிகளில் வெற்றியும் 23 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்துவருகிறது. அ.தி.மு.கவைப் பொறுத்தவரை 55 தொகுதிகளில் வெற்றியும் 20 தொகுதிகளில் முன்னிலையிலும் இருந்துவருகிறது. மக்கள் நீதி மய்யம் என்று கட்சியைத் தொடங்கி முதன்முறையாக தேர்தல் அரசியலில் இறங்கிய நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார்.

    அவருக்கு எதிராக பா.ஜ.க வேட்பாளராக வானதி ஸ்ரீனிவாசனும் காங்கிரஸ் வேட்பாளராக மயூரா ஜெயக்குமாரும் போட்டியிட்டனர். அதில், தொடக்கத்தில் கமல்ஹாசனும், மயூரா ஜெயக்குமாரும் முன்னிலையில் இருந்தனர். கமல்ஹாசன் முதல் இடத்திலும், மயூரா ஜெயக்குமார் இரண்டாவது இடத்திலும் இருந்தனர். பின்னர், மதியத்துக்கு மேல் இரண்டாவது இடத்துக்கு வந்தார் வானதி ஸ்ரீனிவாசன்.

    தொடர்ந்து முன்னிலையில் இருந்த கமல்ஹாசன் இறுதிகட்டத்தை நெருங்கும்போது பின்னடைவைச் சந்தித்தார். வானதி ஸ்ரீனிவாசன் முன்னிலையை எட்டிய அவர், 26-வது சுற்று முடிவில் வெற்றி பெற்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: