• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • TN Assembly Election Result 2021 : சென்னை தொகுதிகளில் 1,000 வாக்குகளைக் கூடப் பெறமுடியாமல் தடுமாறும் அ.ம.மு.க வேட்பாளர்கள்

TN Assembly Election Result 2021 : சென்னை தொகுதிகளில் 1,000 வாக்குகளைக் கூடப் பெறமுடியாமல் தடுமாறும் அ.ம.மு.க வேட்பாளர்கள்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

சென்னையிலுள்ள 11 தொகுதிகளில் 9 தொகுதிகளில் 1,000 வாக்குகளைக் கூட பெறமுடியாமல் அ.ம.மு.க வேட்பாளர்கள் தடுமாறிவருகின்றனர்.

  • Share this:
    தமிழகம் உள்பட்ட ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அ.தி.மு.க, தி.மு.க இடையே நெருக்கமான போட்டி இருந்துவருகிறது. தி.மு.க கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மைக்கு கூடுதலான தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது. இருப்பினும், 200 தொகுதிகள் வரை தி.மு.க வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

    தி.மு.க கூட்டணி 151 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  அ.தி.மு.க 82 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இந்த தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவருடைய வேட்பாளர்கள் வாங்கும் வாக்கு அ.தி.மு.கவுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டது.

    குறிப்பாக, தே.மு.தி.கவும், அ.ம.மு.கவும் கூட்டணி வைத்துள்ளதால் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறவாய்ப்புள்ளதாக பார்க்கப்பட்டது. ஆனால், அ.ம.மு.க வேட்பாளர்கள் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளனர். அக்கட்சியின் தலைவர் டி.டி.வி.தினகரனே அவர் போட்டியிட்ட கோவில்பட்டி தொகுதியில் வெற்றி பெறமுடியாமல் தடுமாறிவருகிறது. குறிப்பாக, சென்னையிலுள்ள 11 தொகுதிகளிலும் அ.ம.மு.க மிகச் சொற்பமான வாக்குகளையே பெற்றுள்ளது. சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பெரம்பூர், சேப்பாக்கம் தொகுதிகளைத் தவிர்த்து மீதமுள்ள 9 தொகுதிகளிலும் 1,000 வாக்குகளை கூட அ.ம.மு.க வேட்பாளர்களால் பெற முடியவில்லை. பெரம்பூரில் மட்டும் 2,000 வாக்குகளை அ.ம.மு.க கடந்துள்ளது.

    அதேநேரத்தில் மக்கள் நீதி மய்யம் சென்னையிலுள்ள நிறைய தொகுதிகளில் 8,000 வரையிலான வாக்குளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்களை மீறி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் டி.டி.வி.தினகரன். ஆனால், தற்போது நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், 500-க்கும் குறைவான வாக்குகளையே அ.ம.மு.க வேட்பாளர் பெற்றுள்ளார். ஆர்.கே.நகரில் அ.ம.மு.க வேட்பாளருக்கும் நோட்டாவுக்கும் இடையேதான் போட்டி நடைபெற்றுவருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: