உங்கள் தொகுதி : 25 ஆண்டுகளாக திமுக ஆதிக்கம் செலுத்தி வரும் திருவாரூர்
இந்த தொகுதியில் அதிமுக வென்றதே இல்லை. கடந்த 25 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் திமுக இதுவரை 8 முறை வென்றுள்ளது.
- News18 Tamil
- Last Updated: January 12, 2021, 7:29 PM IST
தியாகராஜர் ஆறு இடங்களில் கோயில் கொண்டுள்ளதால் ஆரூர் என தேவாரப்பாடல்களில் குறிப்பிடப்படுவதே இந்த திருவாரூர். 33 ஏக்கர் பரப்பளவில் தியாகராஜர் கோயிலும் அதே பரப்பளவில் கமலாலயக் குளமும் அமைந்துள்ளது இந்த ஊரின் சிறப்பு. 96 அடி உயரமும், 400 டன் எடையும் கொண்ட ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றது. சோழர்களின் தலைநகராக திகந்ழ்ந்த ஊர் இது இத்தனை சிறப்பு மிக்க திருவாரூரில்தான் சங்கீத மும்மூர்த்திகளாக போற்றப்படும் தியாகராஜ பாகவதர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் பிறந்தனர். காவிரி டெல்டா பகுதியான திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடக்கிறது.
இதற்கு மத்தியில்தான் ஓஎன்ஜிசி சார்பில் 80 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகள் மூலம் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு விளைநிலங்களுக்கு அருகே நரம்புகளாய் ஊடுருவியுள்ள குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதில் ஏற்படும் கசிவால் நெல் வயல்கள் பாதிக்கப்படுவது தீராத பிரச்னை. முன்னாள் முதல்வர் கரணாநிதி பிறந்தது நாகை மாவட்டம் திருக்குவளை என்றபோதும், சிறுவயதிலேயே திருவாரூரை அடுத்து காட்டூரில்தான் தாயுடன் அவர் குடியேறினார். அங்கே கருணாநிதியின் தாய்க்கு நினைவிடமும் உண்டு.
13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற கருணாநிதி 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்த தொகுதியில் இருந்துதான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ம் ஆண்டு 68366 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் பன்னீர்செல்வத்தை கருணாநிதி வீழ்த்தினார். அவர் சந்தித்த தேர்தல்களில் மட்டுமல்ல அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அதிகமான வாக்கு வித்தியாசம் அது. இந்த தொகுதியில் அதிமுக வென்றதே இல்லை. கடந்த 25 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வரும் திமுக இதுவரை 8 முறை வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் 5 முறையும், காங்கிரஸ் ஒருமுறையும் வென்றுள்ளன.
இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த கருணாநிதி மரணமடைந்த நிலையில் 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திமுகவின் பூண்டி கலைவாணன் அதிமுக வேட்பாளர் ஜீவானந்தத்தை 64,571 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திருவாரூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அறிவிக்கப்பட்ட அரைவட்ட சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நாகை - திருவாரூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலைத் திட்ட பணிகள் பாதியில் கைவிடப்பட்டதால் குண்டும் குழியுமாய் இருக்கும் சாலையால் மக்கள் அவதிக்கப்பட்டு வருகின்றனர். பல வெளியூர் பேருந்துகள் விளமலில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலேயே நின்று விடுவதாலும், நகருக்குள் செல்லாமல் புறவழிச்சாலையில் இறக்கிவிடுவதாலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ஆனாலும் சமகால பிரச்னைகளை அலசியபடி தேர்தலுக்கு வாக்காளர்கள் தயாராகிவிட்டனர்.
இதற்கு மத்தியில்தான் ஓஎன்ஜிசி சார்பில் 80 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகள் மூலம் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு விளைநிலங்களுக்கு அருகே நரம்புகளாய் ஊடுருவியுள்ள குழாய்கள் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதில் ஏற்படும் கசிவால் நெல் வயல்கள் பாதிக்கப்படுவது தீராத பிரச்னை. முன்னாள் முதல்வர் கரணாநிதி பிறந்தது நாகை மாவட்டம் திருக்குவளை என்றபோதும், சிறுவயதிலேயே திருவாரூரை அடுத்து காட்டூரில்தான் தாயுடன் அவர் குடியேறினார். அங்கே கருணாநிதியின் தாய்க்கு நினைவிடமும் உண்டு.
13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற கருணாநிதி 2011 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்த தொகுதியில் இருந்துதான் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016ம் ஆண்டு 68366 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் பன்னீர்செல்வத்தை கருணாநிதி வீழ்த்தினார். அவர் சந்தித்த தேர்தல்களில் மட்டுமல்ல அந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அதிகமான வாக்கு வித்தியாசம் அது.