யார் கட்சி தொடங்கினாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது - கனிமொழி

யார் கட்சி தொடங்கினாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது - கனிமொழி

கனிமொழி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பான கேள்வி பதிலளித்த கனிமொழி எம்பி, தமிழகத்தில் பிரதான கட்சி திமுக, அதிமுகதான் என்றும் யார் கட்சி தொடங்கினாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

  • Share this:
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என உதகையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மகளிர் அணி தலைவி கனிமொழி தெரிவித்தார்.

திமுக சார்பாக தமிழகம் முழுவதும் 'விடியலை நோக்கி' என்ற பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளபட்டு வருகிறது. அதன்படி நீலகிரி மாவட்டத்திற்கு திமுக மகளிர் அணி தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். உதகையில் நடைபெற்ற மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தின் பிரச்னைகளை கனிமொழி கேட்டறிந்தார். அதன் பின்னர்  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தார்.

Also read: ’காவல்துறை பாதுகாப்பு வேண்டாம், தனியார் பாதுகாப்பை வைத்துக்கொள்கிறேன்’ - நீதிமன்றத்தில் ஜெ.தீபா தகவல்..

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழியிடம் ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து கேட்டபோது, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் தமிழகத்தில் பிரதான கட்சி திமுக, அதிமுக தான் எனவும், தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

தமிழக மக்கள் இந்த விஷயத்தில் தெளிவாக இருப்பதாகக் கூறிய கனிமொழி, ரஜினி இன்னும் அரசியலுக்கே வரவில்லை, கட்சி தொடங்கவுமில்லை, அவரைப் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை என்றார். முன்னதாக தோடரின பழங்குடியின மக்கள் பாரம்பரிய நடனமாடி கனிமொழியை வரவேற்னர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: