TN Election Result 2021| காரைக்குடியில் எச்.ராஜாவிற்கு பின்னடைவு

TN Election Result 2021| காரைக்குடியில் எச்.ராஜாவிற்கு பின்னடைவு

எச்.ராஜா

காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா களமிறங்கியதால், தமிழக அளவில் கவனம் அந்த தொகுதி கவனம் ஈர்த்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என தெரிகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது வரை தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 88 தொகுதிகளிலும் அதிமுக 61 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

    இதற்கிடையே, காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா களமிறங்கியதால், தமிழக அளவில் அந்த தொகுதி கவனம் ஈர்த்துள்ளது. இந்த தொகுதியில், அவரை எதிர்த்து திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மாங்குடி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காரைக்குடியில் எச்.ராஜாவிற்கு பின்னடைவு சந்தித்துள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர் மாங்குடி முன்னிலை பெற்றுள்ளார்.

    ஏற்கனவே, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் எச்.ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். அந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரமே வென்றார்.

     

     
    Published by:Esakki Raja
    First published: