TN Assembly Election Result 2021 | திமுக வேட்பாளர் சாதனை வெற்றி; எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு!

TN Assembly Election Result 2021 | திமுக வேட்பாளர் சாதனை வெற்றி; எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு!

அண்ணா அறிவாலயம்

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா, 29,607 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.

  • Share this:
    திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

    தமிழகத்தில் 1996-க்கு பின் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க உள்ளது. தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது திமுக 150 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் முன்னிலையில் உள்ளது.

    இதனால் தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. 1996-ம் வருடத்திற்கு பின்னர் தமிழகத்தில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் திலகபாமா, 29,607 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.

    இதேபோல், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சிவசக்திவேல், அமமுக சார்பில் போட்டியிட்ட செல்வக்குமார் உள்ளிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்திலான வெற்றி இதுவாகும்.
    Published by:Esakki Raja
    First published: