tn assembly election results 2021 | 160 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை: 74 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை

tn assembly election results 2021 | 160 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை: 74 தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை

ஸ்டாலின்

தமிழகத்தில் தி.மு.க கூட்டணி 160 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அ.தி.மு.க கூட்டணி 74 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. 

  • Share this:
    தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு தற்போது வரை தொடர்ந்துவருகிறது. காலை 8 மணியிலிருந்து வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்துவருகிறது. 202 தொகுதிகளில் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 32 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது. அந்த 32 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 16 தொகுதிகளிலும், அ.தி.மு.க கூட்டணி 16 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது.

    தற்போதைய நிலையில், அ.தி.மு.க கூட்டணி 58 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க கூட்டணி 144 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க கூட்டணியில் தி.மு.க தனிப்பட்டு 114 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், ம.தி.மு.க 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 3 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை அ.தி.மு.க 49 தொகுதிகளிலும், பா.ம.க 5 தொகுதிகளிலும் பா.ஜ.க 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க 1 தொகுதியில் முன்னிலையில் உள்ளது. முதல்வர் வேட்பாளர்களாக அறிவித்துக்கொண்ட கமல்ஹாசன், சீமான், டி.டி.வி.தினகரன் ஆகியோர் தோல்வியைத் தழுவினர்.
    Published by:Karthick S
    First published: