தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதையடுத்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும் என்றே கணித்திருந்தன. அதன்படி, நேற்று 16-வது சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தொடக்கம் முதலே திமுக கூட்டணி பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதிமுக கூட்டணி 80 தொகுதிகளை கூட கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
தொடர்ந்து தேர்தல் முடிவுகளின் படி, தமிழகத்தில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போது திமுக 125 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் 1996-க்கு பின் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் பல தொகுதிகளில் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், ஒரு சில தொகுதிகளில் முடிவுகள் வெளியாவதில் தாமதமும் ஆனது. அந்தவகையில், தமிழகத்தில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 வேட்பாளர்கள் விவரம் வருமாறு,
1. தியாகராயநகரில் திமுக வேட்பாளர் கருணாநிதி எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை விட 137 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
2. மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசனை விட 281 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
3. தென்காசியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
4. மேட்டூரில் பாமக வேட்பாளர் சதாசிவம் எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஸ்ரீநிவாசபெருமாளை விட 656 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
5. காட்பாடியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் எதிராக போட்டியிட்டட அதிமுக வேட்பாளர் ராமுவை விட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
6. கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவனை விட 794 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
7. விருதாச்சலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் எதிராக போட்டியிட்ட பாமக வேட்பாளர் கார்த்திகேயனை விட 862 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
8. நெய்வேலியில் திமுக வேட்பாளர் சபாராஜேந்திரன் எதிராக போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜெகனை விட 977 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
9. ஜோலார்பேட்டையில் திமுக வேட்பாளர் தேவராஜ் எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வீரமணியை விட 1091 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
10. கிணத்துகடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமோதனர் எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை விட 1095 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
11. அந்தியூரில் திமுக வேட்பாளார் வெங்கடாச்சலம் எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சண்முகவேலை விட 1275 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
12. திருமயத்தில் திமுக வேட்பாளர் ரகுபதி எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை விட 1382 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
13. தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கயல்விழி எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகனை விட 1393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
14. உத்திரமேரூரில் திமுக வேட்பாளர் சுந்தர் எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சோமசுந்தரத்தை விட 1622 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
15. பொள்ளாச்சியில் அதிமுக வேட்பாளர் பெள்ளாச்சி ஜெயராமன் எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் வரதராஜனை விட 1725 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
16. கோயம்பத்தூர் தெற்கில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் எதிராக போட்டியிட்ட மநீம வேட்பாளர் கமல்ஹாசனை விட 1728 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
17. கூடலூரில் அதிமுக வேட்பாளர் பொன் ஜெயசீலன் எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் கலசலிங்கத்தை விட 1945 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
18. திருப்போரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பாலாஜி எதிராக போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஆறுமுகத்தை விட 1947 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
19. ராசிபுரத்தில் திமுக வேட்பாளர் மதிவேந்தன் எதிராக போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சரோஜாவை விட 1952 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
20. மைலம் தொகுதியில் பாமக வேட்பாளர் சிவக்குமார் எதிராக போட்டியிட்ட திமுக வேட்பாளர் மாசிலாமணியை விட 2230 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, DMK, Election Result, TN Assembly Election 2021