TN Election Result 2021 | தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை!
TN Election Result 2021 | தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை!
பாஜக ஆதரவாளரின் மனைவி படுகொலை
எல்.முருகன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், அண்ணாமலை, குஷ்பூ, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் முக்கிய கவனம் பெற்றுள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிட்ட நிலையில், 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு தமிழகத்தின் சட்டப்பேரவையில் இடம் பெறும் வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, 20 தொகுதிகளில் களம் கண்டுள்ளது.
அதன்படி, அரவக்குறிச்சி-அண்ணாமலை, ஆயிரம் விளக்கு- குஷ்பூ, தாராபுரம்(தனி)-எல்.முருகன், காரைக்குடி- ஹெச்.ராஜா, கோவை தெற்கு- வானதி சீனிவாசன், நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி, திருவண்ணாமலை- தணிகைவேல், குளச்சல் - ரமேஷ், ராமநாதபுரம் - குப்புராம், மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி, துறைமுகம் - வினோஜ் பி செல்வம், திருக்கோவிலூர் - கலிவரதன், திட்டக்குடி (தனி)- பெரியசாமி, விருதுநகர் - பாண்டுரங்கன், திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், மதுரை வடக்கு - சரவணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில், எல்.முருகன், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், அண்ணாமலை, குஷ்பூ, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட ஸ்டார் வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் முக்கிய கவனம் பெற்றுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதன்படி, துறைமுகம், தாராபுரம் உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி உள்ளிட்ட 5 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வம், தாராபுரத்தில் எல்.முருகன், உதகமண்டலத்தில் போஜராஜன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்து வருகின்றனர்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.