TN Election Result 2021| தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை!

TN Election Result 2021| தாராபுரத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் முன்னிலை!

பாஜக தலைவர் முருகன்

தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் களமிறங்கியதால், தமிழக அளவில் கவனம் அந்த தொகுதி கவனம் ஈர்த்துள்ளது.

  • Share this:
    தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா விதிமுறைகள் காரணமாக முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என தெரிகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்நிலையில், தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் களமிறங்கியதால், தமிழக அளவில் கவனம் அந்த தொகுதி கவனம் ஈர்த்துள்ளது. இந்த தொகுதியில், திமுக சார்பில் கயல்விழி, மக்கள் நீதி மய்யத்தின் சார்லி, அமமுகவின் கலாராணி, நாம் தமிழர் கட்சியின் ரஞ்சிதா, சுயேட்சைகள் 4 பேர் என மொத்தம் 9 பேர் களத்தில் உள்ளனர். இருப்பினும், திமுக - பாஜக இடையேதான் நேரடிபோட்டி காணப்பட்டது.

    அதன்படி, தாராபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் முன்னிலை பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் கயல்விழி பின்னடைவை சந்தித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: