தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதில்லை என்று மின்சாரத் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை பதிலுரையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பூரண மதுவிலக்கு படிப்படியாக கொண்டு வரப்படும் என்று அறிவித்து 500 கடைகள் மூடப்பட்டதாகவும், அதே போல நேரம் மாற்றம் செய்யப்பட்தோடு, எடப்பாடி பழனிசாமியும் 500 கடைகளை மூடியதாக தெரிவித்தார்.
மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் குறைக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், புதிய கடைகள் திறக்கப்படுவதாகவும், பாரின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டதாக குறிப்பிட்டார்.
தனது தொகுதியில் கூட இதற்கு முன்பு டாஸ்மாக் கடை இருந்ததில்லை தற்போது வந்துள்ளதாக தெரிவித்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, இதனை அரசியல் மேடை ஆக்க வேண்டாம் என்று கூறியதோடு, உங்கள் தொகுதியில் மதுக்கடை விருப்பத்தோடு வந்துள்ளதாக விருப்பம் இல்லாமல் வந்துள்ளதா என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சி என்றாலே மின்வெட்டு என்ற மாயத்தோற்றம் உருவாகிறது - அமைச்சர் செந்தில் பாலாஜி
இதனிடையே தங்கமணி கேள்விக்கு பதில் அளித்து பேசிய மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2021 திமுக தேர்தல் அறிக்கையில் எங்கும் பூரண மதுவிலக்கு குறித்து தெரிவிக்கவில்லை என விளக்கம் அளித்தார். தமிழகத்தில் 5350 டாஸ்மாக் இருப்பதாகவும் புதிய கடைகள் எங்கும் திறக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மூடப்படும் கடைகள் தான் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Senthil Balaji, Tasmac, TN Assembly