Home /News /tamil-nadu /

அக்‌ஷய பாத்திரா விவகாரம்... சட்டசபையில் காரசார விவாதம்..!

அக்‌ஷய பாத்திரா விவகாரம்... சட்டசபையில் காரசார விவாதம்..!

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தரும் தனியார் அமைப்பினருக்கு உணவு தயாரிக்க இடம் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் , எந்த தனியாருக்கும் தாரை வார்க்கவில்லை எனவும் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கீதா ஜீவன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், காலை உணவு தருகிறோம் என யார் சொன்னாலும் அனுமதி வழங்கிவிடுவீர்களா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், மதிய உணவுத்திட்டத்தை போல காலை உணவுத் திட்டத்தையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் எனவும் கீதா ஜீவன் வலியுறுத்தினார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், காலை உணவுத்திட்டம் தற்போது இல்லாத நிலையில் தாமாக முன்வந்து தனியார் அமைப்பினர் வழங்குவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், காலை உணவு வழங்கும் திட்டதை செயல்படுத்த எந்த தனியாருக்கும் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர்கள் உணவு தயாரிக்க இடம் கொடுத்து அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த இடத்திற்கு பட்டா போட்டு வழங்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மீண்டும் கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் கீதா ஜீவன், எத்தனையோ நிறுவனங்கள் இருக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், காலை உணவு வழங்குவது தர்ம காரியம் எனவும் அந்த தர்மத்தை யார் செய்ய முன்வந்தாலும், ஏன் நீங்கள் செய்ய முன்வந்தாலும் அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Also see...
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: TN Assembly

அடுத்த செய்தி