• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி... நூலிழையில் ஆட்சி மாற்றத்தை நழுவவிட்ட திமுக!

இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி... நூலிழையில் ஆட்சி மாற்றத்தை நழுவவிட்ட திமுக!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. எனவே, தற்போதைய சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றுள்ளது. எனினும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு திமுக-வுக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 18-ம் தேதியும், 4 தொகுதிகளுக்கு கடந்த 19-ம் தேதியும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இந்த இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று திமுக கூட்டணிக் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் திமுக அதிக இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. பின்னர் நிலைமை மாறி, இரு கட்சிகளும் தலா 11 இடங்களில் முன்னிலை வகித்தன. இறுதியில், அதிகபட்சமாக 13 தொகுதிகளில் திமுக-வும், 9 தொகுதிகளில் அதிமுக-வும் வெற்றிபெற்றன. பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகளை திமுக கைப்பற்றியது.

இதேபோல் ஓசூர், திருவாரூர், தஞ்சாவூர், ஆண்டிபட்டி, பெரியகுளம், திருப்பரங்குன்றம் தொகுதிகளிலும் திமுக வெற்றியை பதிவு செய்துள்ளது. அதிமுக-விலிருந்து திமுக-வுக்கு மாறிய செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் வெற்றிபெற்றார்.

இதேவேளையில், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் திமுக வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுத்து அதிமுக-வினர் வெற்றிபெற்றனர். இதேபோல, பரமக்குடி, சாத்தூர், விளாத்திகுளம், சூலூர் ஆகிய தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம், அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 123-ஆகஅதிகரித்துள்ளது. இதன்மூலம், ஆட்சியை எடப்பாடி பழனிசாமி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேரை தகுதிநீக்கம் செய்யுமாறு சபாநாயகரிடம் அதிமுக கொறடா புகார் அளித்துள்ளார். திமுக கூட்டணிக்கு ஏற்கனவே 97 எம்எல்ஏ-க்கள் இருந்த நிலையில், தற்போது 13 தொகுதிகளையும் சேர்த்து, திமுக கூட்டணியின் பலம் 110-ஆக உயர்ந்துள்ளது.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. எனவே, தற்போதைய சூழலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றிபெற்ற போதிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

Also see.. தொண்டர்கள் மத்தியில் கருணாநிதியை உருக்கமாக நினைவு கூர்ந்த ஸ்டாலின்

Also see...




தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: