ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருமகன் ஈவெரா, கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு இரங்கல் தீர்மானம்...சட்டமன்றம் ஒத்திவைப்பு...!

திருமகன் ஈவெரா, கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு இரங்கல் தீர்மானம்...சட்டமன்றம் ஒத்திவைப்பு...!

சட்டமன்றத்தில் அஞ்சலி

சட்டமன்றத்தில் அஞ்சலி

மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆளுநர் தனது உரையில் திராவிட மாடல், பெரியார், அண்ணா உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்த நிலையில், உரையில் இல்லாத சிலவற்றையும் பேசியதாக முதலமைச்சர் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வர, ஆளுநர் பாதியிலேயே அவையில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று காலை 10 மணிக்கு மீண்டும்  சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கின. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சின்னசாமி, ஆதிமூலம், துரை. கோவிந்தராசன், சோமசுந்தரம் ஆகியோருக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

அதுபோலவே, தமிழறிஞர்  க.நெடுஞ்செழியன், ஆரூர் தாஸ், தமிழறிஞர் ஒளவை நடராஜன், ஓவியர் மனோகர் தேவதாஸ், மருத்துவர் மஸ்தான், கால்பந்து ஜாம்பவான் பீலே ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். நாளை மற்றும் நாளை மறுநாள் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு முதலமைச்சர் பதிலுரை வழங்குவதோடு கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது.

First published:

Tags: TN Assembly