ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'2 நாள் வேண்டாம்.. நாளைக்கு வரட்டும்' - அதிமுகவுக்கு ஆதரவாக சபாநாயகரிடம் குரல் கொடுத்த துரைமுருகன்!

'2 நாள் வேண்டாம்.. நாளைக்கு வரட்டும்' - அதிமுகவுக்கு ஆதரவாக சபாநாயகரிடம் குரல் கொடுத்த துரைமுருகன்!

மாதிரி படம்

மாதிரி படம்

TN Assembly | யாரையும், எங்கேயும் உட்கார வையுங்கள் என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    yஅதிமுகவினர் சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்டதையடுத்து, சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க அதிமுகவினருக்கு தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

    தொடர்ந்து 2வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது. சபாநாயகர் அவரது உரையை தொடங்கியதும், அதிமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். பல முறை எச்சரித்தும், அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அதிமுகவினரை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்ற உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பேசிய அவர், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க அதிமுகவினருக்கு 2 நாட்கள் தடை விதித்தார். இதையடுத்து அமைச்சர் துரைமுருகன், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இன்று ஒரு நாள் மட்டும் அவர்கள் வெளியே செல்லட்டும் நாளை அவை நடவடிக்கைகள் கலந்து கொள்ள வேண்டும் என்றால் கலந்து கொள்ளட்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து, நாளை அதிமுகவினர் பங்கேற்க சபாநாயகர் உத்தரவிட்டார்.

    எதிர்கட்சி தலைவர் பதவி மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி, துணை எதிர்கட்சி தலைவர் பதவி என்பது விதியில் இல்லை எனவும் கூறினார். மேலும், யாரையும், எங்கேயும் உட்கார வையுங்கள் என்று கூறும் உரிமை யாருக்கும் கிடையாது. சம்மத்தப்பட்ட உறுப்பினர்கள் கேட்டால் பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    Published by:Anupriyam K
    First published:

    Tags: TN Assembly