திமுக வேட்பாளர் பட்டியல் 10-ம் தேதி வெளியிடப்படும் - மு.க.ஸ்டாலின்

திமுக வேட்பாளர் பட்டியல் 10-ம் தேதி வெளியிடப்படும் - மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் 10-ம் தேதி வெளியிடப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தேர்தல் பிரசாரத்திலும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் இத்தகைய சூழலில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 9 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது பேசிய மு.க.ஸ்டாலின் வரும் 10-ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார்.

திமுக தேர்தல் அறிக்கை 11 -ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில் மார்ச் 12 ஆம் தேதி முதல் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது.

திமுக - காங்கிரஸ் இடையே இன்னும் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில் விடுதலை சிறுத்தைகளுக்கு 6 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் திமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தரவுள்ளனர்.
Published by:Sheik Hanifah
First published: