பேச்சுவார்த்தையை புறக்கணித்த தேமுதிக... மீண்டும் அழைக்காத அதிமுக

கோப்பு படம்

தேமுதிகவுக்கு அதிமுக தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

  • Share this:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போளூர் அடுத்த ஆர்.குன்னத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று தேமுதிக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் பேசிய தேமுதிக துணை செயாலாளர் எல்.கே.சுதீஷ், “கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலில் நாம் அதிமுகவோடு கூட்டணி வைக்கவில்லை என்றால் இன்று அதிமுக என்ற ஒரு கட்சியே இருந்திருக்காது. நாம் கூட்டணிக்காக அதிமுக பின்னாடி செல்லவில்லை, அதிமுக தான் தேமுதிக பின்னால் வருகின்றனர். எங்களிடம் கூட்டணிக்காக வாருங்கள் என்று பல கட்சியிடமிருந்து எனக்கு போன் வந்து கொண்டிருக்கிறது. என்று தொண்டர்கள் மத்தியில் ஆரவாரமாக பேசினார்.

அதிமுக - தேமுதிக இடையேயான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் சுதீஷின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை நடைபெற இருந்த பேச்சுவார்த்தையிலும் திடீரென்று தேமுதிக கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை அழைப்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இன்று அதிமுக விருப்ப மனு வழங்கியவர்களுக்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தங்கமணி மற்றும் வேலுமணி பங்கேற்கவில்லை என்பதால் இவர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தேமுதிகவிற்கு இதுவரை அழைப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
Published by:Sheik Hanifah
First published: