ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் இல்லத்தில் சோதனை நடத்தியதற்கு பார் கவுன்சில் கண்டனம்!
ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் இல்லத்தில் சோதனை நடத்தியதற்கு பார் கவுன்சில் கண்டனம்!
பார் கவுன்சில்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மாரிஸ் குமார் இல்லத்திற்குள் எந்த வித முன் அனுமதியும் பெறாமல் நுழைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞர் இல்லத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தியதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் தமிழக டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மாரிஸ் குமார் இல்லத்திற்குள் எந்த வித முன் அனுமதியும் பெறாமல் நுழைந்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
வழக்கறிஞராக தங்களது பணியை செய்யும் வழக்கறிஞரின் இல்லத்தில் முன் அனுமதி பெறாமல் சோதனை நடத்துவது சட்டத்தை மீறிய செயல் என அமல்ராஜ் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வழக்கறிஞர் மாரிஸ் குமாரின் இல்லத்தில் சோதனை நடத்திய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தனது கடிதத்தில் கேட்டு கொண்டுள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.