Home /News /tamil-nadu /

நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம்

நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

4-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவையிலும், 5-ம் தேதி வட தமிழகத்திலும் கனமழை பெய்யும்.

  • News18
  • Last Updated :
நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும், அது மேற்கு நோக்கி நகரும் எனவும் கூறினார். இதனால் 4,5 மற்றும் 6-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நாளை தமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும், நாளை மறுநாள் வடதமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் மீனவர்களுக்கும் எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. 4-ம் தேதி கடலோர தமிழகம் மற்றும் புதுவையிலும், 5-ம் தேதி வட தமிழகத்திலும் கனமழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Weather Forecast

அடுத்த செய்தி