'நாங்கள் எதிர்பார்த்த கோரிக்கைகளை அமைச்சர் அறிவிக்கவில்லை' - பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
'நாங்கள் எதிர்பார்த்த கோரிக்கைகளை அமைச்சர் அறிவிக்கவில்லை' - பட்ஜெட் குறித்து விவசாயிகள் குற்றச்சாட்டு
விவசாயிகள் குற்றச்சாட்டு
Tamil Nadu Budget 2022-23 : நெல் முட்டைகளை சேமித்து வைப்பதற்கு நிரந்தர கட்டிடங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த பட்ஜெட்டில் வேளாண்துறை அமைச்சர் அறிவிக்கவில்லை என சிதம்பரம் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்தார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்து அறிக்கையில் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் , வான்புகழ் கொண்ட வள்ளுவரின் கனவை நிறைவேற்றும் வகையிலும், வானத்தை நம்பி வாழும் உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது.
மண்ணையும் காப்போம். மக்களையும் காப்போம். மாநிலத்தை மட்டுமல்ல, இந்த நானிலத்தையும் காப்போம்!
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் பட்ஜெட் குறித்து சிதம்பரம் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.
அதில் தமிழகத்தில் விவசாயிகளுக்கான பட்ஜெட் அறிவிக்கப்பட்ட நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் குளறுபடிகள் குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடவில்லை. திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்குகளால் பல லட்சம் மூட்டைகள் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து சிதம்பரம் அருகே அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மதிவாணன் தெரிவிக்கையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டுள்ளன. எனவே அந்த கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக கணினிகளை வைப்பதற்கு கட்டிடங்கள் அமைக்க வேண்டும். அங்கு கொள்முதல் செய்யும் நெல் முட்டைகளை சேமித்து வைப்பதற்கு நிரந்தர கட்டிடங்கள் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த பட்ஜெட்டில் வேளாண்துறை அமைச்சர் அறிவிக்கவில்லை என சிதம்பரம் பகுதி விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்,பிரசன்னவெங்கடேசன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.