தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் நிலையில்,
திமுக எம்எல்ஏக்கள் பாரம்பரிய நெல் விதையுடன் சட்டமன்றத்திற்கு வந்தது பொதுமக்களின் கவனத்தை பெற்றுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்த பிறகு இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடப்பு ஆண்டுக்கான 2022-23 முழுமையான நிதி நிலை அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதையும் படிங்க - பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 36 ஆயிரம் கோடி; இனி அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி
இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
வேளாண் பட்ஜெட் தொடங்குவதற்கு முன்பாக வந்தவாசி தொகுதி திமுக எம்.எல்.ஏ. அம்பேத் குமார், மன்னார்குடி தொகுதி திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா ஆகியோர், பாரம்பரிய நெல் ரகமான குழியடிச்சான் நெல் விதையுடன் சட்டமன்றத்திற்கு வந்தனர். இது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
இதையும் படிங்க - வேளாண் பட்ஜெட் 2022 - 2023 முக்கியம்சங்கள்
குழியடிச்சான் நெல் ரகம் உப்பு மண்ணிலும் முளைத்து விளைச்சல் தரக்கூடியது. கடலோர மாவட்ட விவசாயிகள் இந்த நெல் ரகத்தை பயன்படுத்தி சாகுபடி செய்யலாம்.
குறைந்த அளவு தண்ணீரில் அதிக மகசூல் தரக்கூடியது. இதில் ஏராளமான சக்திகள் உள்ளது. தாய் பால் சுரப்பதற்கும், கொடல் புற்றுநோய் வருவதை தடுப்பதற்கும் இந்த அரசி பயன் தருகிறது. வரட்சி காலத்திலும் குழியடிச்சான் நெல் வளரும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.